மெரினாவில் பேனா சின்னம்: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!
சென்னை மெரினாவில் முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவாக பேனா சின்னம் அமைக்க இருப்பதற்கு எதிராக தொடரப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு சென்னை மெரினா கடலில் பேனா சின்னம் அமைக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்தது.
இதற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் செய்யப்பட்டது. இந்த நினைவுச்சின்னம் அமைத்தால் மீன்வளம் பாதிக்கப்படும் என்றும் அந்த மனதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சென்னை மெரினாவில் பேனா சின்னம் அமைப்பதற்கு எதிரான மனுவை சுப்ரீம் கோர்ட் அதிரடியாக தள்ளுபடி செய்துள்ளது. மேலும் இந்த மனுவை பசுமை தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்யும் படியும் மனுதாரர்களுக்கு சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் உத்தரவிட்டு உள்ளனர்
Edited by Siva