வியாழன், 21 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: திங்கள், 31 ஜூலை 2023 (20:20 IST)

சாம்பாரில் கிடந்த பேப்பர்...பெருச்சாளி எதுவும் இருக்கா? ஓட்டல் ஊழியர்களை வெளுத்து வாங்கிய அதிகாரி

paper in sambar
சென்னையில்  ஒரு ஓட்டலுக்கு சென்று சோதனையிட்ட அதிகாரி, சமையல் அறைக்குச் சென்று பார்த்தபோது, சாம்பாரில் ஒரு பேப்பர் கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

இன்றைய காலத்தில் விலைவாசி விண்ணைமுட்டும் வகையில் உயர்ந்துவிட்டது. அனைத்துப் பெட்ரோல், டீசல், எரிவாயு உள்ளிட்ட எரிபொருட்களின் விலையும் உயர்ந்துவிட்டது.

இதனால், அத்திவாசிய பொருட்களின் விலையும் உயர்ந்துவிட்டது. இது அனைத்து மக்களையும் பாதிப்பிற்குள்ளாக்கியுள்ளது. ஏழை, எளிய மக்கள் முதற்கொண்டு பலரும் ஓட்டல்களில் சென்று உணவு சாப்பிடும்போது, அவர்கள் தரும் பணத்திற்கு தரமான உணவு கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது  நியாயம் தானே.

ஆனால், ஓட்டல்களில் சிலவற்றில் சுகாதாரமான முறையில் உணவு தயாரிப்பதை உணவுபாதுகாப்புத்துறை அதிகாரி வெளியிட்டு வருகிறார்.

இன்று, சென்னையில்  ஒரு ஓட்டலுக்கு சென்று சோதனையிட்ட அதிகாரி, சமையல் அறைக்குச் சென்று பார்த்தபோது, சாம்பாரில் ஒரு பேப்பர் கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து, ‘’ஓட்டல்தானே நடந்தறீங்க…வேறெதும் பெருச்சாளி உள்ளதா என்று கேட்டார். அதேபோல், தட்டுகளில் ஈக்கள் இருந்ததைப் பார்த்து ஈ மொய்த்தை பொருட்களை திண்ணக் கூடாது என்று கூறுகிறோமே ‘’ எப்படி மனச்சாட்சி இன்றி இப்படி செய்கிறீர்கள் ? என்று கேள்வி எழுப்பினார்.