செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 8 டிசம்பர் 2023 (09:45 IST)

மீண்டும் ஏற்றத்தில் பங்குச்சந்தை.. 70 ஆயிரத்தை நெருங்கும் சென்செக்ஸ்..!

share
பங்குச்சந்தை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்தில் இருந்தாலும் இந்த வாரம் முதல் மூன்று நாட்கள் பங்குச்சந்தை ஏற்றத்தில் இருந்தது என்பதையும் நேற்று மட்டும் சிறிது அளவு பங்கு சந்தை சரிந்தது என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் இன்று மீண்டும் பங்குச்சந்தை ஏற்றத்தில் இருப்பது முதலீட்டாளர்களை மகிழ்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. இன்று காலை பங்கு சந்தை வர்த்தகம் தொடங்கியவுடன்  தற்போது சென்செக்ஸ் 160 புள்ளிகள் ஏற்றத்தில் உள்ளது என்பதும் 69 ஆயிரத்து 686 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இன்னும் ஒரு 200 புள்ளிகள் மேல் உயர்ந்துவிட்டால் சென்செக்ஸ் 70 ஆயிரத்தை தொட்டுவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் தேசிய பங்குச்சந்தையான நிஃப்டி 60 புள்ளிகள் உயர்ந்து 20,965 என்ற புள்ளிகளில்  வர்த்தகம் ஆகி   வருகிறது. மொத்தத்தில் பங்கு சந்தை மீண்டும் ஏற்றம் கண்டிருப்பது முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Edited by Siva