நேற்று திடீரென உச்சம் சென்ற பங்குச்சந்தை.. இன்றைய சென்செக்ஸ் நிலவரம் என்ன?
நேற்று காலை பங்குச் சந்தை சுமார் 200 புள்ளிகள் சென்செக்ஸ் சரிந்த நிலையில், பின்னர் திடீரென பங்குச் சந்தை உயர்ந்தது என்பதும் கிட்டத்தட்ட 1000 புள்ளிகள் வரை உயர்ந்து, இறுதியில் 800 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகம் நிறைவு பெற்றது.
இந்த நிலையில், இன்றும் பங்குச் சந்தை ஏற்றத்தில் இருந்தாலும் பெரிய அளவில் மாற்றமில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது.
மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் வெறும் 17 புள்ளிகள் மட்டுமே உயர்ந்து 81,785 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதேபோல், தேசிய பங்குச் சந்தை நிப்டி ஐந்து புள்ளிகள் குறைந்து 24,073 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது.
இன்றைய பங்குச் சந்தையில் பஜாஜ் பைனான்ஸ், ஹெச்சிஎல் டெக்னாலஜி, ஐசிஐசிஐ வங்கி, ஐடிசி, ஸ்டேட் வங்கி, சன் பார்மா உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் உயர்ந்துள்ளன.
அதேபோல், ஆசியன் பெயிண்ட், பாரதி ஏர்டெல், ஹெச்டிஎஃப்சி வங்கி, இன்போசிஸ், கோடக் மகேந்திரா வங்கி உள்ளிட்ட பங்குகள் சரிந்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Edited by Siva