வியாழன், 12 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
Written By Siva
Last Updated : வியாழன், 5 டிசம்பர் 2024 (11:44 IST)

10 நாட்களாக உயர்ந்து வந்த பங்குச்சந்தை இன்று திடீர் சரிவு.. முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..!

கடந்த வாரம் திங்கட்கிழமை முதல் தொடர்ச்சியாக பங்குச்சந்தை உயர்ந்து வந்த நிலையில், இன்று திடீரென பங்குச்சந்தை சரிந்தது, முதலீட்டாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
இந்திய பங்குச்சந்தை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது என்பது தெரிந்ததே. குறிப்பாக, அதானி மீது அமெரிக்காவில் குற்றச்சாட்டு பதிவு செய்தவுடன், இந்திய பங்குச்சந்தை படு மோசமாக சரிந்தது என்பதையும் பார்த்தோம்.
 
இந்த நிலையில், இன்று பங்குச்சந்தை ஆரம்பத்தில் முதலில் சரிந்து வருவதாகவும், சற்றுமுன் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 325 புள்ளிகள் சரிந்து 80,638 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதைப் போல, தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 123 புள்ளிகள் சரிந்து 24,344 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
 
இன்றைய பங்குச்சந்தையில் பாரதி ஏர்டெல், இன்போசிஸ், மகேந்திரா அண்ட் மகேந்திரா, டி.சி.எஸ், டைட்டான் உள்ளிட்ட பங்குகள் உயர்ந்துள்ளதாகவும், ஆசியன் பெயிண்ட், ஆக்சிஸ் வங்கி, பஜாஜ் பைனான்ஸ், எச்.சி.எல் டெக்னாலஜி, எச்.டி.எஃப்சி வங்கி, ஹிந்துஸ்தான் லீவர், ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி, ஐடிசி, கோடக் மகேந்திரா வங்கி உள்ளிட்ட பங்குகள் சரிந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
 
 
Edited by Siva