வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
Written By Siva
Last Updated : திங்கள், 5 ஜூன் 2023 (10:48 IST)

பங்குச்சந்தை மீண்டும் உச்சம்.. சென்செக்ஸ் 63,000ஐ நெருங்குகிறது.!

மும்பை பங்குச்சந்தை மீண்டும் புதிய உச்சம் தொட்டு சாதனை
கடந்த சில வாரங்களாக பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்துடன் இருந்தாலும் சில நாட்களாக பங்குச்சந்தை உயர்ந்து கொண்டே வருவது முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். 
 
அந்த வகையில் வாரத்தின் முதல் நாளான இன்று பங்குச்சந்தை உச்சத்திற்கு சென்றுள்ளது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் இன்று 318 புள்ளிகள் உயர்ந்து 62,865 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அனேகமாக இன்று 63 ஆயிரத்து நெருங்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. 
 
அதேபோல் தேசிய பங்கு சந்தையான நிப்டி 85 புள்ளிகள் உயர்ந்து 18,618 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. பங்குச்சந்தை குறைந்த நேரத்தில் அதிக பங்குகளை வாங்கிய முதலீட்டாளர்களுக்கு தற்போது மிகப்பெரிய லாபம் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
Edited by Siva