2 நாள் ஏற்றத்திற்கு பின் திடீரென சரிந்த பங்குச்சந்தை: இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!
கடந்த இரண்டு நாட்களாக இந்திய பங்குச்சந்தை ஏற்றத்தில் இருந்ததால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்த நிலையில் இன்று ஏறிய வேகத்தில் இறங்கி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சற்றுமுன் மும்பை பங்குச்சந்தையின் வர்த்தகம் தொடங்கிய நிலையில் சென்செக்ஸ் 260 புள்ளிகள் சரிந்து 62710 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
அதேபோல் தேசிய பங்கு சந்தை 65 புள்ளிகள் சரிந்து 18,562 என்ற புள்ளிகளில் வர்த்தகமாக வருகிறது. இந்த வாரத்தில் திங்கள் செவ்வாய் ஆகிய இரண்டு நாள் பங்குச்சந்தை ஏறிய நிலையில் திடீரென புதன்கிழமை இறங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தாலும் இனி வருங்காலத்தில் பங்குச்சந்தை ஏற்றமடைய அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
பங்குச்சந்தை இறங்கும் போதெல்லாம் வாங்குவதற்கான வாய்ப்பாக முதலீட்டாளர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.
Edited by Siva