பட வாய்ப்பு கிடைக்காததால் வாட்ச்மேன் வேலை செய்யும் நடிகர்!

Last Updated: வெள்ளி, 22 மார்ச் 2019 (16:41 IST)
பிரபல நடிகர் ஒருவர் பட வாய்ப்புகள் இல்லாததால் வாட்ச்மேன் வேலை பார்த்து வருகிறார். 
 

 
பாலிவுட் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் ஒருவர் அனுராக் காஷ்யப்  தற்போது ஹிந்தி மற்றும் தமிழ் சினிமாவின் நடிகராக அறிமுகமாகியுள்ளார். இவருடைய படங்கள் அனைத்தும் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு வந்தாலும் திறமை வாய்ந்த கலைஞர்களை ஊக்குவிக்கும் பொருட்டு பல புதுமுக நடிகர்களை தன் படத்தில் நடிக்கவைத்து சினிமா வாய்ப்பை கொடுப்பார். 
 
அப்படித்தான் திறமைவாய்ந்த ஒரு சிறந்த நடிகராக சாவி சித்துவையும்  அனுராக் காஷ்யப் அறிமுகம் செய்துவைத்தார். பிளாக் ஃபிரைடே, குலால், பாட்டியாலா ஹவுஸ் உள்ளிட்ட படங்களில் நடித்த சாவி சித்து. அந்த படங்களுக்கு பிறகு அவருக்கு பட வாய்ப்புகள் இல்லாததால் பண பிரச்சனை ஏற்பட்டுள்ளது. 
 
இதையடுத்து அவர் வாட்ச்மேன் வேலை பார்த்து வருகிறாராம்.  வாட்ச்மேன் வேலை பார்ப்பது குறித்து சாவி கூறியதாவது, தினமும் 12 மணிநேரம் வேலை. பேருந்தில் டிக்கெட் எடுக்கக் கூட காசு இல்லை. தியேட்டருக்கு சென்று படம் பார்ப்பது எல்லாம் கனவு மாதிரி ஆகிவிட்டது. என் நிதி நிலை சரியில்லை என்றார். 
 

 
சாவி சித்து பற்றிய இந்த வீடியோ வெளியானதும், இதனை கேள்விப்பட்ட பாலிவுட் நடிகர் ராஜ்குமார் ராவ், இயக்குநர் அனுராக் கஷ்யப் ஆகியோர் அவருக்கு உதவி செய்ய முன்வந்துள்ளனர். வாய்ப்பு கிடைக்கவில்லை என்று முடங்கிவிடாமல் வாட்ச்மேன் வேலைக்கு சென்ற சாவி சித்துவை ராஜ்குமார் ராவ் பாராட்டியுள்ளார். மேலும் சாவி சித்துவுக்கு உதவு செய்வதாகவும் கூறியுள்ளார்.  
 

 
சாவி சித்து பற்றி அனுராக் கஷ்யப் கூறியிருப்பதாவது, சாவி சித்துவை ஒரு நடிகராக மதிக்கிறேன். அவரை நான் மூன்று முறை என் படங்களில் நடிக்க வைத்துள்ளேன். பட வாய்ப்பு கிடைக்காவிட்டால் பலர் மதுவுக்கு அடிமையாகிவிடுகிறார்கள். அப்படி இருக்கும்போது சித்து மரியாதையுடன் வாழ வேலைக்கு சென்றதை மதிக்கிறேன் என்றார். நிச்சயம் அவருக்கு உதவி செய்வேன் என்று கூறியுள்ளார். 


இதில் மேலும் படிக்கவும் :