வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. பாராளுமன்ற தேர்தல் 2019
  3. தேர்தல் 2019 சிறப்பு நிகழ்வுகள்
Written By
Last Modified: புதன், 20 மார்ச் 2019 (13:11 IST)

கோவா நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜக வெற்றி !!

சமீபத்தில் கோவா முதல்வர் மனோகர் பரீக்கர் உடல்நிலை சரியில்லம் மரணம் அடைந்ததை அடுத்து ஆளும் பாஜக அரசு கோவாவின் புதிய முதல்வராக பிரமோத் சாவந்த்தை தேர்த்தெடுத்தது. 
இந்நிலையில் காங்கிரஸ் அரசு சட்டப்பேரவையில் பாஜக தங்கள் பெரும்பான்மையை நிரூபிக்க கோரியது.
 
இந்நிலையில் கோவா சட்டபேரவையில் முதல்வர் பிரமோத் சாவந்த் தலைமையிலான பாஜக அரசு இன்று நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றுள்ளது.
 
பெரும்பான்மைக்கு 19 எம்.எல்.ஏக்களின் ஆதரவு தேவை என்ற நிலையில் 20 எம்.எல்.ஏக்களின் ஆதரவுடன் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றார் கோவா முதல்வர் பிரமோத் சாவந்த்.