புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. பாராளுமன்ற தேர்தல் 2019
  3. தேர்தல் 2019 சிறப்பு நிகழ்வுகள்
Written By
Last Modified: வியாழன், 21 மார்ச் 2019 (12:51 IST)

தாமரைக்கு ஓட்டு போடுங்க.. உளறிய பாமக வேட்பாளர்: அசிங்கமாக திட்டிய அமைச்சர்

வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பாமக வேட்பாளர் செய்த தவறிற்காக பொறுப்பாளர் ஒருவரை கண்டபடி திட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
பாராளுமன்ற தேர்தல் நெருங்குவதை முன்னிட்டு கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். அப்படி திண்டுக்கல்லில் போட்டியிடும் பாமக வேட்பாளர் ஜோதிமுத்துக்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவருக்கு ஆதரவாக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மக்களிடம் பேசினார். திண்டுக்கல் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளருமான போஸ் உட்பட பலர் அந்நிகழ்ச்சியில் பங்குபெற்றனர்.
அப்போது பேசிய பாமக வேட்பாளர் மாம்பழ சின்னத்தில் ஓட்டு போடுங்கள் என சொல்வதற்கு பதிலாக தாமரை சின்னத்தில் மறக்காம ஓட்டு போடுங்கள் என கூறினார். இதனால் அங்கிருந்த அனைவரும் சிரித்தனர். இதைப்பார்த்து கடுமையாக டென்ஷனான திண்டுக்கல் சீனிவாசன், திண்டுக்கல் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் போஸ்சை கண்டமேனிக்கு திட்ட ஆரம்பித்துவிட்டார். ஏற்கனவே சின்னத்தை மாற்றி கூறியதில் சிரித்துக்கொண்டிருந்த மக்கள், அமைச்சரின் இந்த ஆராதனையை கேட்டு இன்னும் சிரிக்க ஆரம்பித்தனர்.
 
ஆகமொத்தம் அந்த நிகழ்ச்சி ஒரு கலக்கப்போவது யார் என்ற நிகழ்ச்சி போல் ஆகிவிட்டது. ஏற்கனவே திண்டுக்கல்லில் பாமகவின் வாக்குவங்கி சுத்தம், அதில் வேட்பாளர் வேறு இப்படி பேசியிருப்பது பாமகவை மக்களிடையே காமெடி பீசாக்கியுள்ளது.