ஞாயிறு, 17 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. நாடாளுமன்ற தேர்தல் 2024
Written By Senthil Velan
Last Updated : செவ்வாய், 16 ஏப்ரல் 2024 (16:15 IST)

தமிழ் கலாசாரம் மோடியால் பெருமை..! மூத்த மொழி தமிழ்..! ராஜ்நாத் சிங்...

Rajnath Sing
உலகம் முழுவதும் தமிழ் கலாச்சாரம் பிரதமரால் பெருமைப்படுத்தப்பட்டுள்ளது என்று மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
 
கிருஷ்ணகிரி தொகுதி பாஜக வேட்பாளர் நரசிம்மனை ஆதரித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பரப்புரை மேற்கொண்டார். தமிழில் வணக்கம் கூறி தேர்தல் பரப்புரை கூட்டத்தில் அமைச்சர் ராஜ்நாத் சிங் உரையை தொடங்கினார். 
 
அப்போது பேசிய அவர், நாடாளுமன்ற கட்டிடத்தில் செங்கோல் நிறுவப்பட்டுள்ளது. தமிழ் கலாச்சாரத்தின் அடையாளமான செங்கோலை நாடாளுமன்றத்தில் நிறுவி பெருமைப்படுத்தியவர் பிரதமர் மோடி என்றார்.
 
பிரதமரின் செயல்பாட்டுக்கு பின்னர் தமிழ்நாடு என்று பேசும் போது முதலில் நம் நினைவுக்கு வருவது செங்கோல் தான் என்றும் பிரதமர் மோடி தமிழ் கலாச்சாரத்திற்கு முழு மதிப்பளிக்கிறார் என்றும் உலகம் முழுவதும் தமிழ் கலாச்சாரம் பிரதமரால் பெருமைப்படுத்தப்பட்டுள்ளது என்றும் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
 
தமிழ்நாடு என்னை மிகவும் கவர்ந்த மாநிலம் என்றும் இந்தியாவில் உள்ள மொழிகளுக்கு மூத்த மொழி தமிழ்  என்றும் குறிப்பிட்டார். பாதுகாப்பு தளவாடங்களை ஏற்றுமதி செய்யும் முதல் 25 நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது என்று அவர் கூறினார். உலகில் 5ஜி சேவை பயன்பாட்டில் இருக்கும்போது இந்தியாவில் மோடி 6ஜி சேவை வழங்க முயற்சி செய்து வருகிறார் என்று அவர் தெரிவித்தார்.

 
நாட்டில் ராணுவ கப்பல் கட்டும் அளவிற்கு இந்தியா உயர்ந்து உள்ளது என்றும் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை மூலம் ஊழல் தடுக்கப்பட்டுள்ளது என்றும் ராஜ்நாத் சிங் கூறினார்.