வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. நாடாளுமன்ற தேர்தல் 2024
Written By Senthil Velan
Last Updated : வெள்ளி, 5 ஏப்ரல் 2024 (13:11 IST)

அனல் பறக்கும் தேர்தல்.! அதிகாரிகளுக்கு பறந்த முக்கிய உத்தரவு..!

Sathyapratha Sago
வாக்குச்சாவடிகளில் அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என்று அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கடிதம்  அனுப்பியுள்ளார்.
 
நாடாளுமன்ற தேர்தல் தமிழகத்தில் வருகிற 19-ந்தேதி நடைபெறவுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.  

தேர்தலில் மக்கள் வாக்களிப்பதற்காக தமிழகத்தில் 68 ஆயிரம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன.  வாக்குச்சாவடிகளில் அடிப்படை வசதிகளை செய்து தரும்படி அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
 
வாக்குச்சாவடிகளில் 15 க்கு15 அடி அளவில் பந்தல் போடப்பட்டு, அதில் வாக்காளர்கள் காத்திருக்க இருக்கை வசதி செய்து தரப்பட வேண்டும் என்றும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

 
வாக்குச்சாவடிகளில் உதவி மையம், குடிநீர், கழிவறை, சாய்வு தளம், மின் இணைப்பு மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகளை செய்து தர வேண்டும் என்றும் குழந்தைகளுடன் வரும் வாக்காளர்கள், பாலூட்டும் தாய்மார்கள் உள்ளிட்டோருக்கான வசதிகளை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் சத்யபிரதா சாகு உத்தரவு பிறப்பித்துள்ளார்.