வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. பாராளுமன்ற தேர்தல் 2019
  3. தேர்தல் 2019 முக்கிய வேட்பாளர்கள்
Written By
Last Modified: வியாழன், 4 ஏப்ரல் 2019 (12:48 IST)

அன்புமணி ஒரு வித்தியாசமான பீஸ்: உட்டு வாங்கிய உதயநிதி!!!

அன்புணி ஒரு ஸ்பெஷல் பீஸ் என்றும் அவர் சூட்கேஸ் மணி எனவும் உதயநிதி ஸ்டாலின் கிண்டலடித்து பேசியுள்ளார்.
 
வரும் மக்களவை தேர்தலில் முதல்முறையாக திமுக கூட்டணியின் நட்சத்திர பேச்சாளராக நடிகரும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மகனுமான உதயநிதி களமிறங்கியுள்ளார். முதல்வர், துணை முதல்வர், மோடி என அனனவரையும் காரசாரமாக அவர் தேர்தல் பிரச்சாரத்தில் விமர்சனம் செய்து வருகிறார்.
 
சென்னையில் திமுக வேட்பாளர் தயாநிதி மாறனை ஆதரித்து பிரச்சாரத்தில் பேசிய அவர் நாய்க்கு சோறு வச்சியே பேர் வச்சியான்னு கேப்பாங்க அது போல மோடி திட்டங்களை அறிவிக்கிறார். ஆனால் எதையும் செய்வது இல்லை.
 
அதிமுக கூட்டணியில் உள்ள அனைவருமே காமெடி பீஸ் தான். அதிலும் அன்புமணி ஒரு வித்தியாசமான பீஸ். முதல்வரை டயர் நக்கி என்றெல்லாம் கூறிய அவர் தற்போது அவர்களுடனே கூட்டணி வைத்துள்ளார். இப்போது மாற்றம் முன்னேற்றம் அன்புமணி என்பது ஏமாற்றம், தடுமாற்றம், சூட்கேஸ் மணி என்று மாறிவிட்டது என பேசினார்.