ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. பாராளுமன்ற தேர்தல் 2019
  3. பாராளுமன்ற தேர்தல் 2019
Written By
Last Updated : திங்கள், 22 ஏப்ரல் 2019 (14:05 IST)

கொடுத்த காச திரும்ப வாங்கிடாங்கப்பா... புலம்பிய பெண் வாக்காளர்: அதிமுக அட்ராசிட்டிஸ்!

தமிழகத்தில் தேர்தல் முடிந்துள்ள நிலையில், அடுத்து நான்கு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் சூடு பிடித்துள்ளது. இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் தேனியில் பெண் வாக்காளர் ஒருவர் அதிமுக மீது அதிருப்தியை பதிவுசெய்துள்ள வீடியோ பரவி வருகிறது. 
 
தேனியில் போட்டியிட்ட தனது மகனை வெற்றி பெற வைப்பதற்காக ஓபிஎஸ், வாக்காளர்களுக்கு பணத்தை வாரி வாரி இறைக்கிறார் என்று அப்போதே கூறப்பட்டது. ஆனால், இதைவிட மோசமான செயலில் அதிமுக ஈடுப்பட்டுள்ளதாக பெண் வாக்காளர் ஒருவர் புலம்பியுள்ளார். 
 
அதில் அவர் கூறியதாவது, ஓட்டு போடவில்லை என்று கூறி அதிமுகவினர் எனக்கு கொடுத்த 1000 ரூபாயை திரும்ப கேட்கிறார்கள். அவர்கள் கேட்டபடியே நானும் பணத்தை திரும்ப தந்துவிட்டேன்.  
வாக்கு சேகரிப்பின் போது ஊக்கத்தொகை கொடுத்த தேனி அதிமுகவினர் திரும்பவும் அந்த தொகையை கேட்டு பெற்ற உயரிய அரசியல் சம்பவம். வாழ்க ஜனநாயகம்! வாழ்க அதிமுகவின் பெருந்தன்மை! நல்ல கோவம் பா இரட்டை இலை பார்ட்டிக்கு என்றும் கூறியுள்ளார். 
 
தினகரனின் அமமுக கட்சியினராவது, டோக்கன் கொடுத்து காசு கொடுக்காமல் ஏமாற்றினார்கள், ஆனால், அதிமுகவினரோ கொடுத்த பணத்தை தேர்தல் முடிந்ததும் திரும்பி கேட்டு வாங்கிக்கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.