வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 28 மார்ச் 2019 (09:16 IST)

பள்ளி மாணவர்களிடம் வழங்கப்படும் சங்கல்ப் பத்ரா – மே 17 இயக்கம் எதிர்ப்பு !

பள்ளி  மாணவர்களிடம் தேர்தல் ஆணையம் கொடுத்து பெற்றோர்களின் உறுதிப்பெறும் பத்திரத்தைக் கொடுப்பது மோசமான நடவடிக்கை என மே 17 அறிக்கை வெளியிட்டுள்ளது.

தேர்தல் ஆணையம் அனைத்துப் பள்ளி மாணவர்களிடமும் சங்கல்ப் பத்ரா என்ற உறுதிமொழிப் பத்திரத்தை நாங்கள் கண்டிப்பாக வாக்களிப்போம் என்று மாணவர்களின் பெற்றோர்களிடத்தில் கையெழுத்துப் பெற்று வரவேண்டும் என மாணவர்கள் கட்டாயப்படுத்தப்படுகிறார்கள்.

அந்தப்படிவத்தில் குடும்ப உறுப்பினர்களின் வாக்காளர் பெயர் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை எண் குறிப்பிட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர். தேர்தல் நேரத்தில் இந்த பாத்திரம் வழங்குவது மிகப்பெரிய மோசடியாகும். ஒருவன் யாருக்கு வாக்களிப்பது என்பதையும், வாக்களிப்பதா கூடாதா என்பதையும் மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.

குடிமக்களைக் கட்டாயப்படுத்தி உறுதிப் பத்திரம் பெறுவதென்பது அரசியல் சாசனத்திற்கே விரோதமான செயலாகும். இச்செயல்முறையை தேர்தல் ஆணையம் உடனடியாக நிறுத்த வேண்டும். இந்தப் படிவத்தில் வாக்காளர் அடையாள அட்டை எண் பெறப்படுவதின் மூலம் அதனைப் பயன்படுத்தி ஆளும் கட்சியினர் கள்ள ஓட்டுக்களை பதிவு செய்வதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றது.

எனவே அப்படிவத்தினை பூர்த்தி செய்ய வலியுறுத்தி பள்ளிகள் கட்டாயப்படுத்தினால் அதுவும் சட்ட விரோதமே. பள்ளி நிர்வாகத்தையும், தேர்தல் ஆணையத்தையும் நோக்கி கேள்வி எழுப்புங்கள். தேர்தல் ஆணையமும், பள்ளி நிர்வாகங்களும் இப்படிவம் பெறும் செயல்முறையை நிறுத்த வேண்டும்.’ எனக் கூறியுள்ளது.