திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. பாராளுமன்ற தேர்தல் 2019
  3. பாராளுமன்ற தேர்தல் 2019
Written By
Last Modified: சனி, 25 மே 2019 (12:10 IST)

மக்களவைத் தேர்தல் எதிரொலி – பதவி விலகும் ராகுல்காந்தி ?

தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து ராகுல் காந்தி பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.

17 ஆவது மக்களவைத் தேர்தலின் 350 க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று தனிபெரும்பாண்மையோடு ஆட்சி அமைக்க இருக்கிறது பாஜக. காங்கிரஸ் ஒட்டுமொத்தமாக 52 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் தொடர்ந்து இரண்டாவது முறையாக பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்துள்ளது.

காங்கிரஸின் தோல்விக்குப் பொறுப்பேற்று பல மாநிலத் தலைவர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இதையடுத்து இன்று காங்கிரஸ் கட்சியின் பொதுக்குழு டெல்லியில் கூடியது. இந்தக் கூட்டத்தில் மக்களவைத் தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியைத் தான் ராஜினாமா செய்வதாக ராகுல் காந்தி அறிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.