நீதான் தைரியமான ஆளாச்சே இப்ப பேசு... எச்.ராஜாவை சீண்டும் கரு.பழனியப்பன்

Last Updated: புதன், 10 ஏப்ரல் 2019 (18:50 IST)
திமுக சார்பில் நட்சத்திர பேச்சாளராக பிரச்சாரத்தில் ஈடுப்பட்டுள்ளா கரு.பழனிச்சாமி. சிவகங்கையில் பிரச்சாரம் மேற்கொண்ட போது எச்.ராஜாவை சீண்டும் வகையில் பேசியுள்ளார். 
 
கரு. பழனியப்பன் சிவகங்கை மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரத்தை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட போது எச்.ராஜா பற்றி பேசியது பின்வருமாறு, 
 
காங்கிரஸ் கட்சியிடம் நீங்கள் ஒரு விஷயத்தை சொல்லலாம், கேள்வி கேட்கலாம். ஆனால் பாஜகவிடம் நீங்கள் கேள்வியே கேட்க முடியாது. தேர்தலுக்கு முன்னாடி பேசறதைதான் தேர்தலுக்கு அப்பறமும் நாம் பேசறோம். 
எச்.ராஜா பெரியாரை பற்றி பேசியதை இப்போ பேச சொல்லுங்க பார்ப்போம்.. ஈவேராதான் இந்த நாட்டின் கெடுன்னு சொன்னார் இல்லையா? இப்போ தேர்தல் பிரச்சாரத்தில் சொல்லட்டும். 
 
பிரச்சாரத்தில் மட்டும் ஏன் வேற முகத்தோடு இருக்கணும். தேர்தலுக்கு முன் ஒரு முகம். தேர்தலுக்கு பின் ஒரு முகம் என எச்.ராஜாவை விமர்சித்துள்ளார். 


இதில் மேலும் படிக்கவும் :