செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. நகர்புற உள்ளாட்சி தேர்தல் 2022
  3. பரபரப்பு சம்பவம்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 17 பிப்ரவரி 2022 (13:43 IST)

மேலும் ஒரு திமுக வேட்பாளர் மரடைப்பால் மரணம்!

தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை பேரூராட்சி 9 வது வார்டில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் அனுசுயா மரணம். 

 
தமிழக நகர்புற உள்ளாட்சி தேர்தல் நாளை மறுநாள் நடைபெற உள்ளது. இன்றுடன் வாக்குசேகரிப்புக்கான அவகாசம் முடிவடையும் நிலையில் வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
 
இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை பேரூராட்சி 9 வது வார்டில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் அனுசுயா பரப்புரையின் போது மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். மேலும் இன்று காலை ஈரோடு மாவட்டம் அம்மாப்பேட்டை பேரூராட்சியில் 2வது வார்டில் திமுக சார்பில் கவுன்சிலர் வேட்பாளராக போட்டியிட்டவர் சித்து ரெட்டி. தேர்தலுக்காக தீவிரமாக தனது வார்டு முழுவதும் பிரச்சாரம் மேற்கொண்டு வந்துள்ளார்.
 
தேர்தலுக்கு இரண்டு நாட்களே உள்ள நிலையில் திமுக வேட்பாளர்கள் அடுத்தடுத்து திடீரென காலமாகும் சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.