வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சுவரொட்டிகள்
Written By Papiksha
Last Updated : வியாழன், 3 அக்டோபர் 2019 (15:33 IST)

திருநங்கை கெட்டப்பில் மிரட்டலான அக்ஷய்குமார் - காஞ்சனா இந்தி ரீமேக் போஸ்டர்!

தமிழ் திரையுலகில் கடின உழைப்பாலும் தன் திறமையாலும் முன்னுக்கு வந்தவர்களில் ஒருவர் நடிகர் ராகவா லாரன்ஸ். குரூப் டான்சராக தனது திரை பயணத்தை துவங்கி டான்ஸ் மாஸ்டராக, நடிகராக,  சிறந்த இயக்குனராக வலம் வருகிறார். இவரது நடிப்பிலும் இயக்கத்திலும் விசித்திரமான பல வெற்றி படங்களை தமிழில் கொடுத்துள்ளார்.


 
அப்படங்களில் ஒன்று தான் அவரது இயக்கத்திலும் நடிப்பிலும் மாபெரும் வெற்றி பெற்ற “முனி”. இப்படத்தை தொடர்ந்து  இரண்டாம் பாகம் “காஞ்சனா” என்ற பெயரிலும்  பிறகு “காஞ்சனா-2 “ என வெளியான அனைத்து பாகங்களிலும்  லாரன்ஸ் வெறித்தனமாக நடித்து ஹிட் கொடுத்தார். 
 
திகில் பட விரும்பிகள் ரசிக்கும் படங்களில் முக்கியமான காஞ்சனா பெரும் வரவேற்பை பெற்று சாதனையை படைத்து  ஃபேமிலி ஆடியன்ஸ் மத்தியிலும் மிகுந்த வரவேற்பை பெற்றது. முனி , காஞ்சனா, காஞ்சனா 1 , காஞ்சனா  2,   காஞ்சனா 3 என அத்தனை படமும் வசூலில் சாதனை செய்தது. இப்படி தமிழ்,  தெலுங்கை தொடர்ந்து தற்போது காஞ்சனா திரைப்படத்தை இந்தியில் அக்சய் குமாரை வைத்து லாரன்ஸ் இயக்கி வருகிறார். கடந்த 2011ம் ஆண்டு தமிழில் வெளியான காஞ்சனா படத்தில் சரத் குமார் ஒரு திருநங்கையாக நடித்திருப்பார். தற்போது அந்த கதாபாத்திரத்தில் இந்தியில் அமிதாப் பச்சன் நடிக்கிறார். லக்‌ஷ்மி பாம் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ள இப்படத்தில்  அக்‌ஷய்குமார், கியாரா அத்வானி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்
 
கடந்த சில மாதத்திற்கு முன்னர் இப்படத்தின் ஃபர்ஸ்ட்  வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் தற்போது நவராத்திரி விழாவின் சிறப்பாக அக்‌ஷய்குமாரின் திருநங்கை கெட்டப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. இதை பற்றி கூறியுள்ள அக்சய்குமார், இந்த நாளில் என்னுடைய லக்‌ஷ்மி தோற்றத்தை உங்களிடம் பகிர்கிறேன். மிகவும் ஆர்வத்துடனும் பயத்துடனும் நான் எதிர்பார்க்கும் கதாபாத்திரம் இது. வாழ்க்கையில் நாம் எடுக்கும் புதிய முயற்சி தான் சுவாரஸ்யம். இல்லையா?” என்று கூறியுள்ளார். இந்த போஸ்டர் தமிழ் ரசிகர்களிடையேயும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.