1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. கிசு கிசு
Written By Geetha priya
Last Modified: செவ்வாய், 22 ஏப்ரல் 2014 (14:40 IST)

அவங்க இன்னும் தொடர்பு எல்லையில்தான் இருக்காங்க

செகண்ட் வேர்ல்ட் படப்பிடிப்பில் தொடங்கிய அவர்களின் நெருக்கம் இன்றும் தொடர்கிறது.

 உச்சத்தின் பொம்மைப்பட ட்ரெய்லர் வெளியீடு அன்று சென்னையிலுள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் பிரஸ்மீட் நடத்தப்பட்டது. அது தெரியாமல் இந்த செகண்ட் வேர்ல்ட் ஜோடி அதே ஹோட்டலுக்கு வர, பத்திரிகையாளர்கள் இருவரையும் ஒருசேர பார்த்துவிட்டனர். உடனே யு டர்ன் எடுத்து அங்கிருந்து வெளியேறினார்கள்.
 
சமீபத்தில் பாடல் வெளியீட்டுவிழாவுக்காக சென்னை வந்த நடிகை விழா முடிந்ததும் நடிகருடன் ஹோட்டலுக்கு சென்று டிஸ்கஷன் நடத்தியுள்ளார். இந்த நெருக்கம் திருமணத்தில் முடியலாம் என்கிறது கோடம்பாக்க காஸிப் ஏரியா.