Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

உலக நாயகனின் அசத்தலான திட்டம்

Last Modified வெள்ளி, 1 டிசம்பர் 2017 (19:09 IST)
உலக நாயகனின் அசத்தலான திட்டத்தைப் பார்த்து சினிமாவுலகம் அரண்டு போயிருக்கிறதாம்.


தொழில் வித்தைக்காரர் என்ற மரியாதை உலக நாயகனுக்கு இருந்தாலும், அந்த வித்தையால் காசு வரவில்லை என்றால் யாருக்கு என்ன பயன்? அதனால் உலக நாயகனுக்கு வருடத்திற்கு ஒன்றிரண்டு பட வாய்ப்புகளே கிடைத்து வந்தன.அதுவரை ட்விட்டரில் மட்டுமே அரசியல் கருத்துகளைக் கூறிவந்தவர், ‘நானும் ஜெயிலுக்குப் போறேன்’ என்பது போல அரசியலில் குதிப்பதாகக் கூறியிருக்கிறார். இதனால், அவரைத்தேடி ஏராளமான பணம் வருகிறதாம்.

அதனால்தால், இதுவரை கிடப்பில் போட்டிருந்த இரண்டாம் பாகத்தை, மறுபடி தூசி தட்டி மிச்சக் காட்சிகளை எடுக்கப் போகிறாராம். அதுமட்டுமல்ல, அவருக்கு ஏற்பட்டிருக்கும் இந்த மவுசால், அடுத்தடுத்து அவர் படங்களைத் தயாரிக்கவும் ஆட்கள் நிறைய பேர் காத்திருக்கிறார்களாம். அவருடைய திட்டத்தைப் பார்த்து சினிமாவில் பழம் தின்று கொட்டை போட்டவர்களே ஆச்சர்யப்படுகிறார்களாம்.

Widgets Magazine

இதில் மேலும் படிக்கவும் :