படங்களின் எண்ணிக்கையைக் குறைக்கத் திட்டமிடும் முன்னணி நடிகர்


cauveri manickam| Last Modified வெள்ளி, 6 அக்டோபர் 2017 (18:11 IST)
சுமார் மூஞ்சி குமாரான முன்னணி நடிகர், தான் நடிக்கும் படங்களின் எண்ணிக்கையைக் குறைக்கத் திட்டமிட்டுள்ளாராம்.
 

 

‘அளவுக்கு அதிகமானால் அமிர்தமும் நஞ்சு’ என்பார்கள். சுமார் மூஞ்சி குமார் விஷயத்தில் அதுதான் இப்போது நடக்கிறது என்கிறார்கள். தன்னைத் தேடிவரும் எல்லா இயக்குநர்களுக்கும் வாய்ப்பு குடுக்க நினைக்கும் அவர், ஓய்வெடுக்க நேரம் இல்லாதபடி ஏகப்பட்ட படங்களில் நடித்து வருகிறார். அத்துடன், நட்புக்காக வேறு நிறைய படங்களில் தலைகாட்டி வருகிறார்.

தங்கத்துல செஞ்ச செருப்பா இருந்தாலும் தலைமேல வச்சிக்க முடியாது என்பது போல, அடிக்கடி அவரின் படங்கள் ரிலீஸாவதால், அவர் ரசிகர்களுக்கு அலுப்பு தட்ட ஆரம்பித்துவிட்டதாம். இப்படியே போனால் தன் ரசிகர் பட்டாளமே காணாமல் போய்விடும் என்பதை உணர்ந்தவர், ரசிகர்களே எதிர்பார்க்கும் அளவுக்குத் தன் படங்களின் எண்ணிக்கையை குறைத்துக்கொள்ளப் போகிறாராம்.


இதில் மேலும் படிக்கவும் :