கட்டப் பஞ்சாயத்து செய்கிறாரா தலைவர்?

Cauveri Manickam| Last Modified வியாழன், 20 ஏப்ரல் 2017 (18:25 IST)
தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில் நடிகரின் அணி பெருவாரியான வெற்றியைப் பெற முக்கியக் காரணமாக இருந்தது,  முன்னாள் தலைவர் கட்டப் பஞ்சாயத்து செய்கிறார் என்ற குற்றச்சாட்டு தான். இதனால், அவர் போட்டியிடாமலேயே ஒதுங்கிக் கொண்டார்.உயர நடிகர் தலைவரான பிறகாவது நல்லது நடக்கும் என்று நினைத்த தயாரிப்பாளர்களுக்கு, தமிழக அரசியல்  சூழ்நிலைதான் தங்களுக்கும் என்று உணர்ந்து கொண்டார்கள். 
 
ஆம், யார் பதவிக்கு வந்தாலும் கட்டப் பஞ்சாயத்து செய்வதை மட்டும் நிறுத்த மாட்டேன் என்கிறார்கள். சமீபத்தில், அந்த  பிரமாண்டமான படத்துக்குத் தடைகேட்டு நீதிமன்றப் படியேறியது ஒரு தரப்பு. இதுகுறித்து எதிர்த்தரப்பு பதிலளிக்கும்படி  உத்தரவிட்டார் நீதிபதி. அடுத்த விசாரணையில், ‘எங்களுக்குள் எந்த பிரச்னையும் இல்லை, சமரசம் செய்துகொள்கிறோம்’  என்று வழக்கை வாபஸ் வாங்கிவிட்டார்கள். 
 
இருவரையும் அழைத்து சமாதானம் பேசி, அதாவது கட்டப் பஞ்சாயத்து பண்ணியிருக்கிறார் உயரமான நடிகர். அதை,  பெருமையாக வேறு எண்ணி, தன்னுடைய பி.ஆர்.ஓ. மூலம் மீடியாக்களுக்கு செய்தியாகவும் அனுப்பியிருக்கிறார். சினிமாவை  நல்லா காப்பாத்துறீங்க தலைவரே…

webdunia

இதில் மேலும் படிக்கவும் :