Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

சம்பளத்தை உயர்த்திய மலையாள நடிகை

Cauveri Manickam| Last Modified புதன், 19 ஏப்ரல் 2017 (17:35 IST)
காதலால் கட்டிப்போட்ட மலையாளப் படத்தில் நடிகையாக அறிமுகமானவர் இவர். தமிழில் இவர் நடித்து ரிலீஸாகியிருப்பது மூன்றே படங்கள் மட்டும்தான். அதிலும், இரண்டு படங்களில் ஒரே நடிகருக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். ஆனால், அதற்குள் பெரிய நம்பர் நடிகை ரேஞ்சுக்கு தன்னை நினைத்துக்கொண்டு, படத்தின் புரமோஷனுக்கு வர மறுக்கிறாராம்.

 
 
சமீபத்தில் இவர் நடித்து வெளியான இரண்டு படங்களுக்குமே மக்கள் மத்தியில் நல்ல பெயர். கலெக்‌ஷனிலும் இரண்டு படங்களும் குறை வைக்கவில்லை. இதனால், தன்னுடைய சம்பளத்தை திடீரென அரை கோடியாக உயர்த்திவிட்டாராம் நடிகை. ‘இவளுக்கா இந்த ரேட்டு?’ என மற்ற நடிகைகள் மோவாயில் இடித்துக் கொள்கிறார்களாம்.


இதில் மேலும் படிக்கவும் :