Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

விராத்கோஹ்லி-அனுஷ்காவை தொடர்ந்து அடுத்த நட்சத்திர ஜோடியின் திருமணம்

Last Modified வெள்ளி, 5 ஜனவரி 2018 (00:57 IST)
பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான அனுஷ்கா ஷர்மா, கிரிக்கெட் வீரர் விராத் கோஹ்லியை சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார். இந்த திருமண கொண்டாட்டம் கடந்த சில நாட்களாக இருந்த நிலையில் பாலிவுட்டில் மீண்டும் ஒரு நட்சத்திர ஜோடிக்கு திருமணம் நடைபெறவுள்ளது.

கடந்த 2013ஆம் ஆண்டு முதல் காதலித்து வருவதாக கூறப்படும் ரன்வீர்சிங்-தீபிகா படுகோனே ஜோடி நாளை திருமண நிச்சயதார்த்தம் செய்து கொள்ளவிருப்பதாக கூறப்படுகிறது. நாளை தீபிகாவின் பிறந்த நாள் என்பதால் இருவரும் இந்த பிறந்த நாள் கொண்டாட்டத்திற்காக மாலத்தீவு சென்றுள்ளதாகவும், அங்கே தான் இந்த நிச்சயதார்த்தம் நடைபெறவுள்ளதாகவும் வதந்திகள் பரவி வருகின்றது.

கடந்த 2013ஆம் ஆண்டு சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் உருவான ராம் லீலா படத்தில் இருவரும் இணைந்து நடித்தபோது காதல் உண்டானதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தீபிகா, ரன்வீர் நடித்த 'பத்மாவதி' திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :