கண்டிஷன் போடும் தயாரிப்பாளர்கள்… காது கொடுத்துக் கேட்பாரா நடிகர்?


Cauveri Manickam (Suga)| Last Updated: செவ்வாய், 26 செப்டம்பர் 2017 (21:35 IST)
தல நடிகரின் சமீபத்திய தோல்வியால், அடுத்தடுத்த படங்களைத் தயாரிக்க சில கண்டிஷன்களைப் போடுகிறார்களாம் தயாரிப்பாளர்கள்.

 
 
தல நடிகரும், இயக்குநரும் மூன்றாவது முறையாக இணைந்த படம் படுதோல்வி என்கிறார்கள். கூட்டிக் கழித்துப் பார்த்தால், தமிழ்நாட்டில் மட்டும் 30 கோடி ரூபாய் நஷ்டமாம். அத்துடன், இயக்குநருக்கு இன்னும் சம்பள பாக்கி தரவில்லையாம்.
 
இதையெல்லாம் காதில் வாங்கிக் கொள்ளாமல், ஹாயாக ஓய்வெடுக்கிறாராம் தல. இதுவரை அவர் கால்ஷீட்டுக்காகக் காத்திருந்த தயாரிப்பாளர்கள் பாதி பேரை இப்போது காணவில்லையாம். 
 
மீதமிருக்கும் சிலரும், ‘ரொம்ப பெரிய பட்ஜெட் எல்லாம் வேணாம். மினிமம் பட்ஜெட்னா தயாரிக்கிறோம். அதோட, உங்க சம்பளத்தையும் குறைக்கணும்’ என கண்டிஷன் போட்டுள்ளார்களாம். கட்டுப்படுவாரா தல?
 


இதில் மேலும் படிக்கவும் :