புதன், 19 பிப்ரவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : திங்கள், 14 செப்டம்பர் 2020 (17:23 IST)

நானும் போதை அடிமை : வைரலாகும் முன்னணி நடிகையின் வீடியோ ! ரசிகர்கள் அதிர்ச்சி

இந்திய திரையுலகில் பாலிவுட்டுக்கு எப்போது ரசிகர்கள் பட்டாளம் அதிகம். அவர்களுக்கான சம்பளமும் அதிகம்.

பேரும் புகழும் அதிகம். ஆனால் அப்படிப்பட்ட பாலிவுட்டில் அடிக்கடி சர்ச்சைகள் அதிகரித்து வருகிறது.

சுஷாந்தின் மரணத்தை அடுத்து, நடிகை கங்கனா ரனாவத் வாரிசு அரசுகளின் அத்துமீறலை பக்கம் பக்கமாய் எடுத்துக் கூறி வந்த நிலையில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் என்று கூறினார். இதற்கு பெரும் விமர்சனங்கள் உருவானது. முமையில் சிவசேனா ஆட்சி என்பதால் அவரது வீட்டு இடிக்கப்பட இருந்த நிலையில், மும்பை  கோர்ட் இடைக்காலத் தடை விதித்தது.

இந்நிலையில் கங்கனா ரனாவத் கடந்த 9 ஆம் தேதி விமானத்தில் செல்பி, போட்டோ, வீடியோ எடுத்தா விவகாரத்தில் இண்டிகோ விமான நிறுவனத்திற்கு

இந்திய விமானப் போக்குவரத்து இயக்குநரகரகம் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் இதுபோல் இந்நிலை தொடர்ந்தால் 2 வார காலத்திற்கு போக்குவரத்து சேவை ரத்து செய்யப்படும் என எச்சரித்துள்ளது.

இதையடுத்து, சுஷாந்த்  சிங்கின் மரணத்திற்கு சம்பந்தமானவர்கள் போதை வழக்கில் கைதாகி வருகின்றனர்.முக்கியமாக அவரது காதலி ரியா சக்கரவர்த்தி கைதானார். ஏற்கனவே பாலிவுட்டில் உள்ள வாரிசு அரசியல் செய்பவர்களை மாடியா கும்பல் என குற்றம்சாட்டி  வரும் நிலையில் கங்கனா ரணாவத் தனது பழைய வீடியோ ஒன்றில் தான் ஒரு போதைப் பொருள் அடிமை எனத் தெரிவித்துள்ளார்.

இதனால் கங்கனா மேலும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார். அவர் பேசிய வீடியோ வைரல் ஆகி வருகிறது.