வியாழன், 19 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 7 மே 2023 (07:20 IST)

அடித்து நொறுக்கும் அதிநவீன வசதிகளுடன்..! அறிமுகமாகிறது POCO F5 Pro!

POCO F5 Pro
ஸ்மார்ட்போன் விற்பனையில் முன்னணியில் உள்ள நிறுவனங்களில் ஒன்றான போக்கோ தனது புதிய ஸ்மார்ட்போனான POCO F5 Pro ஐ அறிமுகப்படுத்துகிறது.

இந்தியாவில் 5ஜி அறிமுகத்திற்கு பிறகு 5ஜி ஸ்மார்ட்போன்கள் விற்பனை அதிகரித்துள்ளது. அதற்கேற்ப முன்னணி ஸ்மார்ட்போன் நிறுவனங்களும் பல புதிய ஸ்மார்ட்போன்களை தொடர்ந்து சந்தையில் அறிமுகம் செய்து வருகின்றன. அந்த வகையில் பிரபலமான போக்கோ நிறுவனம் தனது POCO F5 Pro ஸ்மார்ட்போனை மே 9ம் தேதி உலக அளவில் வெளியிடுகிறது.

POCO F5 Pro சிறப்பம்சங்கள்:
 
  • 6.67 இன்ச் ஓலெட் டிஸ்ப்ளே,
  • குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 8 ஜென் 1 சிப்செட்
  • 3 GHz ஆக்டாகோர் ப்ராசஸர்,
  • ஆன்ய்ராய்டு 13,
  • 8 ஜிபி ரேம், 128 ஜிபி இண்டெர்னல் மெமரி
  • 64 எம்.பி + 8 எம்.பி + 2 எம்.பி ட்ரிப்பிள் பின்பக்க கேமரா
  • 16 எம்.பி முன்பக்க கேமரா
  • 5500 mAh பேட்டரி, 67W பாஸ்ட் சார்ஜிங், 30W வயர்லெஸ் சார்ஜிங்

இந்த POCO F5 Pro ஸ்மார்ட்போன் விலை குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. இந்த POCO F5 Pro ஸ்மார்ட்போன் மே 9ம் தேதி க்ளோபல் ரிலீஸ் ஆனாலும் இந்தியாவில் எப்போது வெளியாகும் என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை.