1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 26 ஏப்ரல் 2023 (10:48 IST)

ஒரே வாட்ஸப் கணக்கு 4 போன்களில்..! -வாட்ஸப் வெளியிட்ட சூப்பர் அப்டேட்!

WhatsApp
வாட்ஸப் பயன்படுத்துபவர்கள் தங்களது கணக்கை ஒரே சமயத்தில் 4 ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்தும் வசதியை வாட்ஸப் அறிமுகப்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் பல கோடி மக்களால் வாட்ஸப் செயலி பயன்படுத்தப்பட்டு வருகிறது. தனிப்பட்ட செய்தி அனுப்புதல், போட்டோ, வீடியோ, ஆவணங்கள் பகிர்தல், குழு விவாதம், வீடியோ கால், பணம் செலுத்துதல் என பல வசதிகளை வாட்ஸப் அறிமுகப்படுத்தியுள்ளது.

நாளுக்கு நாள் புதிய அப்டேட்டுகளை வெளியிட்டு வரும் வாட்ஸப் தற்போது வாட்ஸப் குழுக்களில் சில மாற்றங்களை செய்துள்ளது. அதன்படி குழுவில் உள்ள நபர் ஒருவர் அனுப்பும் எந்த மெசேஜையும் டெலிட் செய்ய குழு அட்மினுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதுபோல இன்வைட் லிங்க் மூலம் ஒரு குழுவில் இணைய க்ளிக் செய்தால் அட்மின் அங்கீகரித்தால் மட்டுமே குழுவில் இணைய முடியும்.

தற்போது வரை ஒரு வாட்ஸப் அக்கவுண்டை 4 வெவ்வேறு கணிணிகளில் கனெக்ட் செய்து பயன்படுத்தும் வசதி இருந்து வருகிறது. அடுத்த கட்டமாக ஒரு வாட்ஸப் அக்கவுண்டையே 4 செல்போன்களில் வைத்துக் கொள்வதற்கான புதிய வசதியை வாட்ஸப் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்மூலம் ஒரு நபர் ஒன்றுக்கும் மேற்பட்ட ஸ்மார்ட்போன் வைத்திருந்தாலும் ஒரே வாட்ஸப் அக்கவுண்டை பயன்படுத்த முடியும்,

Edit by Prasanth.K