இதான் உலகத்துலேயே ஸ்பீடான ஸ்மார்ட்போன்! - iQOO 11 5G எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்!
உலகின் மிக வேகமான ஸ்மார்ட்போன் என விளம்பரப்படுத்தப்பட்டுள்ள iQOO 11 5G ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
நாள்தோறும் பல புதிய அம்சங்களுடன் பல்வெறு ஸ்மார்ட்போன்கள் வெளியாகி வருகின்றன. இந்தியாவில் 5ஜி சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதால் புதிய 5ஜி ஸ்மார்ட்போன்களுக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அப்படியான எதிர்பார்ப்புடன் ஜனவரி 10ம் தேதி வெளியாகிறது iQOO 11 5G ஸ்மார்ட்போன்.
அதன் எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்களாவன:
குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 8 ஜென் 2 ப்ராசஸர், 6.75 இன்ச் டிஸ்ப்ளே,
ஆக்டா கோர் சிபியு (3.2 GHz, Single core, Cortex X3 + 2.8 GHz, Quad core, Cortex A715 + 2 GHz, Tri core, Cortex A510)
ஆண்ட்ராய்டு 13 இயங்குதளம், அமொலெட் டிஸ்பிளே, 1440x3200 பிக்சல் ரெசல்யூசன்
50 எம்பி, 13 எம்பி ப்ரைமரி கேமரா, 8 எம்பி வைட் ஆங்கிள் கேமரா
8 ஜிபி ரேம், 128 ஜிபி இண்டர்னெல் மெமரி, 5ஜி பேண்ட்
5000 mAh பேட்டரி, யுஎஸ்பி சி டைப் சார்ஜர், ப்ளாஷ் சார்ஜ்
இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.44,990 இருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை அமேசான் தளத்தில் நடைபெற உள்ள நிலையில் சில போட்டிகளையும் நடத்தி வருகிறது.
Edit By Prasanth.K