திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 11 ஜூலை 2019 (20:40 IST)

ரூ.24, 990 விலையில் அட்டகாசமான டிவி அறிமுகம்! எல்.ஜியின் சூப்பர் கலெக்சன்

இந்தியாவில் அனைத்து தரப்பினர் வீடுகளிலும் பெரும்பாலும் டிவி உள்ளது. குறிப்பாக மின்சாதன வசதி உள்ள எல்லா ஊர்களிலும் இந்த டிவி நிச்சயமாக இடம்பெரும் முக்கிய பொழுதுபோக்கு சாதனமாகும். இந்நிலையில் எல்.ஜி இந்தியா நிறுவனம் ஏ.ஐ தின்க் டிவி மாடல்களை அறிமுகம் செய்துள்ளது.
இந்தியாவில் உள்ள மிக பிரமாண்டமாக நிறுவனம் எல்.ஜி ஆகும். எலெக்ட்ரிக் பொருட்கள் முதல் தொழில்நுட்ப பொருட்கள் தனக்கெனத் தனிமுத்திரை பதித்து வாடிக்கையாளர்களை ஈர்த்துள்ளது எல்.ஜி நிறுவனம்.
 
இந்நிலையில் எல்.ஜி நிறுவனம் ஏ.ஐ. தின்க் டிவி மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. இதில் ஏஐ அசிஸ்டண்ட்  வசதியும் உள்ளது. இரண்டாம் தலைமுறைக்கு ஏற்ப ஆல்பா ஜென் 2 இண்டலிஜண்ட் பிராசஸர், ஏஐ சிறப்பம்சம் உள்ள பிக்சர் , சவுண்ட்  பிரைட்னஸ் ஆகியவையும் இதில் உள்ளன.
 
மேலும் இந்த டிவி 32 இன்ச் முதல் 77 இன்ச் வரையிலான் பல்வேறு அளவுகளில் கிடைக்கின்றன. டால்பி விசன், ஹெச் டி ஆர் 10 ப்ரோ , ஹெச் எல் ஜி ப்ரோ ஹெச் டி ஆர் டால்பி அட்மோஸ் ஆகிய வசதிகளும் இதில் தரப்பட்டுள்ளன.
 
இந்த டிவி மாடல்களின் விலை ரூ. 24990, தொடங்கி எல்.ஜி OLED மாடல் விலை ரூ. 209990 என விலையை நிர்ணயித்துள்ளது. யூஹெச்டி விலை ரூ. 50, 990 ஆகவும், நானோ செல் டிவி ரூ. 82 90 ஆகவும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.