புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By
Last Modified: புதன், 10 ஜூலை 2019 (12:32 IST)

சும்மா இருந்தவன உசுப்பி விட்டா... அள்ளி தெறிக்கும் ஏர்டெல்!

ஏர்டெல் நிறுவனம் தனது பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு 100 ரூபாய்-க்கும் குறைந்த விலையில் புதிய ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. 
 
ஏர்டெல் நிறுவனம் கடந்த சில நாட்களாக பல புதிய ரீசார்ஜ் சலுகைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது. கடந்த சில தினகங்களுக்கு முன்னர் ரூ.148 விலையில் 3 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கியது.
 
அதனை தொடர்ந்து இப்போது, ரூ.97 விலையில் 2 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை 14 நாட்களுக்கு வழங்குவதாக அறிவித்துள்ளது. 
இந்த ரீசார்ஜ் திட்டம் ஏர்டெல் ஸ்பெஷல் ரீசார்ஜ் எஸ்.டி.வி. காம்போ பிரிவில் பட்டியலிடப்பட்டுள்ளது. மேலும், ஆந்திர பிரதேசம், தெலுங்கானா மற்றும் கர்நாடகா உள்ளிட்ட வட்டாரங்களில் மட்டும் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
வோடபோன் நிறுவன ஏர்டெல் வழங்கும் சலுகைகளுக்கு போட்டியாக சலுகை வழங்கி வரும் நிலையில், இப்போது ஏர்டெல்லின் இந்த ஆஃபருக்கும் போட்டியாக புதிய ஆஃபரை வழங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.