படிந்தது வாட்ஸ் ஆப் - டிஜிட்டல் கொள்கைகளை ஏற்பதாக அறிவிப்பு!
இந்தியாவின் புதிய டிஜிட்டல் கொள்கைகளை முழுமையாக ஏற்றுக்கொள்வதாக பேஸ்புக், கூகுள், வாட்ஸ் ஆப் தெரிவித்துள்ளன.
மத்திய அரசு கடந்த பிப்ரவரி மாதம் சமூக வலைத்தளங்களுக்கும் ஓடிடி தளங்களுக்கும் புதிய கட்டுப்பாடுகளை விதித்தது. இந்த புதிய கட்டுப்பாடுகள் 3 மாதங்களுக்கு பிறகு அமலுக்கு வரும் என தெரிவித்தது. இந்நிலையில் இந்த புதிய டிஜிட்டல் கொள்கையை எதிர்த்து வாட்ஸ் ஆப் நிறுவனம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
ஆனால் தற்போது இந்தியாவின் புதிய டிஜிட்டல் கொள்கைகளை முழுமையாக ஏற்றுக்கொள்வதாக பேஸ்புக், கூகுள், வாட்ஸ் ஆப் தெரிவித்துள்ளன. மேலும் புதிய கொள்கைகளின் படி கட்டாயம் நியமிக்க வேண்டிய தனி அதிகாரிகளை நியமிப்பதாகவும் அவை அறிவித்துள்ளன.