பிரேக்கிங் நியூஸ், ரெட் என்வலப்: பேஸ்புக் அப்டேட்??


Sugapriya Prakash| Last Updated: சனி, 11 நவம்பர் 2017 (18:13 IST)
பிரபல சமுக வலைதளமான பேஸ்புக் தனது அடுத்த அபேட்டை விரைவில் வெளியிட உள்ளது. இது குறித்த தகவலை விரிவாக காண்போம்.

 
 
பேஸ்புக் தளத்தில் ரெட் என்வலப் (Red Envelope) மற்றும் பிரேக்கிங் (Breaking News) நியூஸ் என இரு அப்டேட் விரைவில் அறிமுகமாகவுள்ளது. 
 
ரெட் என்வலப் மூலம் மற்றவர்களுக்கு பணம் அனுப்பலாம், பிரேக்கிங் நியூஸ் மூலம் மக்களுக்கு முக்கிய செய்திகளை அறிவிக்க முடியும் என கூறப்படுகிறது.
 
பிரேக்கிங் நியூஸ் அம்சம் வழங்குவதை பேஸ்புக் உறுதி செய்துள்ளதாக தெரிகிறது. இருப்பினும் இரண்டு புதிய அம்சங்களுக்கான அதிகாரப்பூர்வமாக சோதனை இதுவரை துவங்கப்படவில்லையாம். 
 
புதிய அம்சங்கள் குறித்த கேள்விக்கு, பேஸ்புக்கில் சார்ப்பில் இருந்து எந்த பதிலும் வரவில்லை இந்த செய்திக்கு மறுப்பும் தெரிவிக்கவில்லை. 
 
ஆனால், அப்டேட் குறித்த எவ்வித தகவலும் தற்போது வழங்க முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இதில் மேலும் படிக்கவும் :