Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

பாலியல் தொல்லை செய்தவனை ஃபேஸ்புக்கில் அம்பலப்படுத்திய பிரபல நடிகை

Last Modified: வெள்ளி, 13 அக்டோபர் 2017 (11:28 IST)

Widgets Magazine

மலையாள நடிகை துர்கா கிருஷ்ணா தனக்கு ஆபாச வீடியோ அனுப்பிய கயவனை ஃபேஸ்புக்கில் அம்பலப்படுத்தி தக்க தண்டனை அளித்துள்ளார் நடிகை துர்கா கிருஷ்ணா.

 
 
நடனக் கலைஞரான கேரளாவை சேர்ந்த துர்கா கிருஷ்ணா மலையாள படங்களில் நடித்து வருகிறார். அவரது பேஸ்புக் பக்கத்திற்கு தொடர்ந்த ஒரு நபர் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனை தைரியமாக எதிர் கொண்டுள்ளார் துர்கா கிருஷ்ணா. கயவனை ஃபேஸ்புக்கில் அம்பலப்படுத்தி தக்க தண்டனை அளித்துள்ளார்.
 
இதுபோன்ற நபர்களுக்கு கண்டனம் தெரிவித்து தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு பதிவினை வெளியிட்டுள்ளார். தனக்கு ஆபாச வீடியோ அனுப்பவியனின் புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் வெளியிட்டு அதில், நான் கோழிக்கோட்டை சேர்ந்த துர்கா கிருஷ்ணா. என் சகோதர சகோதரிகளே நானும் உங்களில் ஒருத்தி. உங்களில் எத்தனை பேர் உண்மை சகோதரர்கள் என்பது தெரியவில்லை. உங்களில் எத்தனை பேர் நரிகள். அதாவது பகலில் நல்லவர்கள் போன்றும், இரவானால் செக்ஸ் ஆசையை வெளிப்படுத்தி உண்மை நிறத்தை காட்டுபவர்கள் என்றும் தெரியவில்லை. அத்தகைய நரிகளுக்கு மனைவி, சகோதரி, தாய், 2 வயது குழந்தை அல்லது 70 வயது பாட்டி என்று அடையாளம் தெரியாது. அவர்கள் புகைப்படங்கள், வீடியோக்கள், மெசேஜ்கள் அனுப்பி தங்களின் செக்ஸ் ஆசையை தீர்த்துக் கொள்ள வேண்டும். அவர்களுக்கு வயது, உறவு எல்லாம் முக்கியம் இல்லை எதிர்பாலினம் தான் முக்கியம்.
 
என் சகோதரர்களுக்கு ஒரு கோரிக்கை. உங்களின் சகோதரிகளை சைக்கோக்களிடமிருந்து காப்பாற்ற உடனே நடவடிக்கை எடுங்கள். கல்வி முறையிலே இது போன்ற விஷயங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினால், எதிர்காலத்தில் பாலியல் தொல்லைக்கு ஆளாகுபவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்காது என தெரிவித்துள்ளார்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

ஒரே படத்தில் உச்சிக்குப் போன நடிகை

‘அர்ஜுன் ரெட்டி’ என்ற ஒரே படத்தின் மூலம் புகழின் உச்சிக்குச் சென்றிருக்கிறார் ஷாலினி ...

news

விஜய் கேரக்டரில் நடிக்கும் பவர் ஸ்டார்....

நடிகர் விஜய் நடித்த தெறி படம் தெலுங்கில் ரிமேக் செய்யப்படவுள்ளது. இந்த படத்தில் டோலிவுட் ...

news

பிக்பாஸ் போட்டியாளரின் தற்கொலை முயற்சி; வைரலாகும் கடிதம்

இந்தி பிக்பாஸ் 11வது சீசன் போட்டியாளர் சப்னா சவுத்ரி தற்கொலை செய்ய முயன்றதற்கு முன்பு ...

news

41 திரையரங்குகளில் மெர்சல் திரையிட தடை கோர வழக்கு

இளையதளபதி விஜய் நடித்துள்ள 'மெர்சல்' திரைப்படம் உலகம் முழுவதும் வரும் தீபாவளி தினத்தில் ...

Widgets Magazine Widgets Magazine