1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 7 டிசம்பர் 2018 (17:55 IST)

பேஸ்புக் நிறுவனத்தின் அதிரடி மாற்றம்... இனி 2019 ல் ஒரே தேர்தல் குஷி தான்...

பேஸ்புக் நிறுவனம் உலக அளவில் புகழ்பெற்ற நிறுவனம். இதன் தலைவராக மார்க் இருக்கிறார். இந்நிறுவனம் அடுத்த வருடம் வரப்போகிற தேர்தலுக்காக பேஸ்புக்கில்  சில  மாற்றங்களை செய்ய போவதாக அறிவித்துள்ளது.
இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் அடுத்த வருடம் வருவதை ஒட்டி பல்வேறு கட்சிகள் விளம்பரங்கள் செய்ய அதிகம் ஆர்வம் காட்டுவார்கள். எனவே பேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம், ஆர்குட் , போன்ற சமூக வலைதளத்தில் அரசியல் விளம்பரங்களை எவ்வாறு நிர்வகிப்பது. எத்தகைய மாற்றத்தை செய்வது என்பது பற்றி புது முடிவுகள் எடுக்கப் போவதாக இந்நிறுவனம் அறிவிப்பு விடுத்துள்ளது.
 
இதில் விளம்பரங்களை பதிவிட விரும்புவர்கள் கட்டாயம் தங்களது அடையாளச் சான்று மற்றும் இருப்பிடச் சான்று உள்ளிட்டவற்றை முன் கூட்டியே இந்நிறுவனத்தில் சமர்பிக்க வேண்டும்.
 
இந்த சமூக வலைதளங்களில் அரசியல் விளம்பரங்களை பதிவிடுபவர்களின் விவரங்கள் அனைத்தும் விளம்பரங்களில் தெரியும். மேலும் ஆன்லைனில் வரும் விளம்பரங்களை அனைவரும் பயன்படுத்தக்கூடிய விதத்தில் சர்ச் வசதி உள்ள விளம்பர மையம் ஒன்று இத்துடன் வழங்கப்படும் என்று கூறியுள்ளது.
 
மேலும் இந்த பேஸ்புக் விளம்பரத்திற்கு எவ்வளவு தொகை கட்டியுள்ளனர் இதை எவ்வளவு பேர் பார்த்துள்ளனர் என்பது போன்ற விவரங்கள் அனைத்தும் இவ்விளம்பரத்திலேயே தெரியும் விதத்தில் இது அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.
 
இதில் முக்கியமாக தேர்தல் சம்பந்தமாக விளம்பரம் செய்வோர் முதலில் தேர்தல் ஆணையத்திடம் அதற்கான உரிமம் பெற்றிருக்க வேண்டும் எனவும் கூறியுள்ளது.