1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 27 நவம்பர் 2018 (10:00 IST)

பேஸ்புக் காதல்: திருமணமான 6 மாதத்தில் காதல் ஜோடி தற்கொலை

திருப்பூரில் திருமணமான ஒரே மாதத்தில் காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர் நந்தகுமார். இவரும் கும்பகோணம் புளியம்பேட்டையைச் சேர்ந்த சத்யபிரியா என்பவரும் பேஸ்புக் மூலம் பழகி பின்னர் காதலர்களாக மாறினார்கள். இவர்களது காதல் விஷயம் இரு வீட்டாருக்கும் தெரியவரவே, அவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
 
இதனையடுத்து கடந்த 6 மாதத்திற்கு முன்னர் இருவரும் வீட்டிலிருந்து வெளியேறி திருமணம் செய்து கொண்டனர். இருவரும் திருப்பூர் வெள்ளகோவில் பகுதியில் வசித்து வந்தனர். 
 
இந்நிலையில் நேற்று இருவரும் தற்கொலை செய்துகொண்டனர். தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், இருவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.