1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 16 ஜூலை 2021 (10:41 IST)

20 லட்சம் கணக்குகளை முடக்கிய வாட்ஸ் ஆப்!

மத்திய அரசின் புதிய விதிகளுக்கு உட்பட்டு 20 லட்சம் இந்தியர்களின் கணக்குகளை வாட்ஸ் ஆப் நிறுவனம் முடக்கியுள்ளது. 

 
சமூக வலைத்தளங்களுக்காக இந்தியாவில் சில மாதங்களுக்கு முன் புதிய தகவல் தொழில்நுட்ப விதிகள் நடைமுறைக்கு வந்தது. இந்த புதிய விதிகளுக்கு கட்டுப்பட்டு மே மாதம் 15 ஆம் தேதி முதல் ஜூன் மாதம் 15 ஆம் தேதிக்குள் வாட்ஸ் ஆப் பயனர்களின் 20 லட்சம் கணக்குகளை அந்நிறுவனம் முடக்கியுள்ளது. 
 
இதேபோல் தவறான 3 கோடியே 20 லட்சம் பதிவுகளை ஃபேஸ்புக் நிறுவனமும் நீக்கியுள்ளது. அதோடு, இந்த செயல்பாடுகள் தங்களது செயல்திறனை மேம்படுத்த வழி செய்யும் எனவும் வாட்ஸ் ஆப் நிறுவனம் தெரிவித்துள்ளது.