1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 10 ஜனவரி 2024 (17:10 IST)

24 GB RAM, 1 TB ஃபோன் மெமரி.. அட்டகாசமான தரத்தில்..! கேமர்களுக்காகவே..! - ROG Phone 8 Pro சிறப்பம்சங்கள்!

ROG Phone 8 Pro
ஆன்லைன் கேம் பிரியர்களுக்காகவே அட்டகாசமான தரத்தில் புதிய ROG Phone 8 Pro மாடலை அறிமுகம் செய்துள்ளது பிரபலமான Asus நிறுவனம்.



தற்போது அனைவரது கைகளிலும் ஸ்மார்ட்போன் தவழ்ந்து வரும் நிலையில் அலுவலக பணிகள், போட்டோ எடுக்க, கேம் விளையாட என பயன்பாட்டிற்கு ஏற்றவாறு பல்வேறு முக்கிய சிறப்பம்சங்களை உள்ளடக்கிய பலத்தரப்பட்ட ஸ்மார்ட்போன்கள் வெளியாகி வருகின்றன. தற்போதை தொழில்நுட்ப காலத்தில் கேமிங் எக்ஸ்பீரியன்ஸ் அதிகரித்துள்ளதால் அதற்கு ஏற்றவாறு கேம் பிரியர்களுக்காகவே ROG Phone 8 Pro மாடலை அறிமுகம் செய்துள்ளது ஏசஸ் நிறுவனம்.

இதில் பின்பக்கம் கேமராவுக்கு கீழ் ஒளிரும் எல்.இ.டி லைட்டுகளால் ஆன ஒரு கேமிங் டிஸ்ப்ளேவும் உள்ளது முக்கியமான சிறப்பம்சமாகும்.

ROG Phone 8 Pro சிறப்பம்சங்கள்:

6.78 இன்ச் ஃபுல் ஹெச்டி ஃப்ளெக்சிபிள் அமோலெட் டிஸ்ப்ளே
குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 8 ஜென் 3 பிராசஸர்
அட்ரினோ 750 ஜிபியு
ஆண்டாய்டு 14, ROG UI
12 ஜிபி / 24 ஜிபி ரேம் வேரியண்ட்
512 ஜிபி / 1 டிபி இண்டெர்னல் மெமரி
50 எம்பி + 13 எம்பி + 32 எம்பி ப்ரைமரி ட்ரிப்பிள் கேமரா
32 எம்.பி முன்பக்க செல்பி கேமரா
5ஜி, டூயல் 4ஜி வோல்ட், வைஃபை,
5500 mAh பேட்டரி, 65 W ஹைப்பர் ஃபாஸ்ட் சார்ஜிங்



இந்த ROG Phone 8 Pro பேண்டம் ப்ளாக் வண்ணத்தில் மட்டுமே உள்ளது. இந்த ROG Phone 8 Pro மாடலின் 128 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.94,999 ஆகவும், 24 ஜிபி ரேம் + 1 டிபி மெமரி மாடலின் விலை ரூ.1,19,999 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது ஒரு அற்புதமான கேமிங் அனுபவத்தை தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கேம் விளையாடுவதால் ஸ்மார்ட்போன் சூடாவதை தவிர்க்க ஏரோ ஆக்டிவ் கூலர் இந்த ஸ்மார்ட்போனுடன் ரூ.5,999க்கு வழங்கப்படுகிறது.


Edit by Prasanth.K