ஐபிஎல் 2021; பெங்களூரை வீழ்த்தி பஞ்சாப் வெற்றி
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்றுவரும் பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிக்கு இடையிலான போட்டியில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது.
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்றுவரும் பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிக்கு இடையிலான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்கள் அடித்தது.
பஞ்சாப் அணி கேப்டன் ராகுல் 51 பந்துகளில் 91 ரன்கள் குவித்து அபாரமாக ஆடினார். ஹர்பிஸ் 17 பந்துகளில் 25 ரன்கள் எடுத்து கடைசிவரை அவுட் ஆகாமல் இருந்து அணியை வெற்றிப்பாதைக்குக் கொண்டு சென்றனர்.
எனவே பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 179 ரன்கள் எடுத்தது.
இந்த நிலையில் 180 என்ற இலக்கை நோக்கி தற்போது பெங்களூர் அணி பேட்டிங் செய்தது
இதில் பெங்களூரு அணியை 34 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது பஞ்சாப் அணி.
பெங்களூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 145 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தனர்.
இந்த தொடரில் பஞ்சாப் 3 வது வெற்றியைப் பதிவு செய்துள்ளது. இது தொடருமா என்று ரசிகர்கள் எதிர்ப்பார்த்துள்ளனர்.