திங்கள், 30 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. ஐபிஎல் 2021
Written By siva
Last Updated : வெள்ளி, 30 ஏப்ரல் 2021 (21:40 IST)

180 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடி வரும் பெங்களூரு: வெற்றி கிடைக்குமா?

180 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடி வரும் பெங்களூரு: வெற்றி கிடைக்குமா?
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்றுவரும் பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிக்கு இடையிலான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்கள் அடித்தது
 
அந்த அணியின் கிறிஸ் கெயில் அதிரடியாகப் விளையாடி 46 ரன்கள் எடுத்தார் என்பதும், கேப்டன் கேஎல் ராகுல் 57 பந்துகளில் 91 ரன்கள் அடித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த இருவருடைய அதிரடி ஆட்டம் காரணமாக பஞ்சாப் அணி 5 விக்கெட்டுக்கு 170 ரன்கள் எடுத்துள்ளது.
 
இந்த நிலையில் 180 என்ற இலக்கை நோக்கி தற்போது பெங்களூர் அணி பேட்டிங் செய்து வருகிறது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் படிக்கல் மற்றும் விராட் கோலி ஆகிய இருவரும் தற்போது விளையாடி வருகின்றனர். இன்றைய போட்டியில் பெங்களூர் அணி வெல்லுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்