எளிய இலக்கை அடைய தடுமாறும் பெங்களூர்: ஐதராபாத்துக்கு ஆறுதல் வெற்றியா?
இன்று நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டியின் 52வது போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 141 ரன்கள் எடுத்துள்ளது
ஐதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜேசன் ராய் 44 ரன்கள் அடித்தார் என்பதும் கேப்டன் வில்லியம்சன் 31 ரன்கள் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்தநிலையில் 142 என்ற இலக்கை நோக்கி தற்போது பெங்களூர் அணி விளையாடி வருகிறது. கேப்டன் விராட் கோலி 5 ரன்களிலும் கிறிஸ்டியன் ஒரு ரன்களிலும் அவுட் ஆகி விட்ட நிலையில் தற்போது படிகல் மற்றும் பரத் ஆகியோர் விளையாடி வருகின்றனர்
142 ரன்கள் என்ற இலக்கை பெங்களூர் அணி திணறி வரும் நிலையில் இன்று ஆறுதல் வெற்றி ஐதராபாத்துக்கு கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது