வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. ஐபிஎல் 2020
Written By Sinoj
Last Modified: புதன், 14 அக்டோபர் 2020 (21:34 IST)

ஐபிஎல்-2020;ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு162 ரன்கள் இலக்கு

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் முப்பதாவது போட்டி இன்று துபாய் மைதானத்தில் நடைபெற உள்ள நிலையில் இன்றைய போட்டியில் டெல்லி மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோத உள்ளன.

புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ள டெல்லி மற்றும் ஏழாவது இடத்தில் உள்ள ராஜஸ்தான் அணிகள் இன்று மோதுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த போட்டியில் டாஸ் சற்று முன் போடப்பட்ட நிலையில் டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் தேர்வு செய்த டில்லி கேபிட்டல்ஸ் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 161 ரன்கள் குவித்து, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு 162 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது.