தொடர்புடைய செய்திகள்
- ரோஹித் ஷர்மாவின் ஓய்வுக்கு பிசிசிஐ அழுத்தம்தான் காரணமா?... ராஜீவ் சுக்லா பதில்!
- எஞ்சிய ஐபிஎல் போட்டிகளை வெளிநாட்டில் நடத்த பிசிசிஐ திட்டம்?
- போர் பதற்றம் எதிரொலி: ஐபிஎல் போட்டிகள் நிறுத்தம்..பிசிசிஐ அதிரடி முடிவு?
- PSL தொடரை வேறு நாட்டுக்கு மாற்றிய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்!
- ‘கண்ணுக்குக் கண் என்றால் உலகமே பார்வையற்றதாகிவிடும்’ –அம்பாத்தி ராயுடுவின் பதிவு!
“நாடுதான் முக்கியம்… மற்ற விஷயங்கள் எல்லாம்…” – ஐபிஎல் ஒத்திவைப்பு சம்மந்தமாக சிஎஸ்கே பதிவு!
இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கிடையில் போர் பதற்ற சூழல் நிலவி வருகிறது. இதன் காரணமாக இரு நாடுகளிலும் இயல்பு வாழ்க்கைப் பாதிப்படையும் சூழல் உருவாகியுள்ளது. இரு நாட்டு எல்லைப் பகுதிகளிலும் உள்ள விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.
இதன் ஒரு பகுதியாக இந்தியாவில் நடந்து வந்த ஐபிஎல் போட்டிகள் தேதி குறிப்பிடப்படாமல் தள்ளிவைக்கப்பட்டுள்ளன. அதே போல பாகிஸ்தானில் நடந்து வரும் PSL தொடரும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஐபிஎல் ஒத்திவைக்கப்பட்டது குறித்து சி எஸ் கே அணி தங்கள் சமூகவலைதளப் பக்கத்தில் “நாடுதான் முக்கியம். மற்ற விஷயங்கள் எல்லாம் காத்திருக்கலாம்” என பதிவிட்டுள்ளது. சி எஸ் கே அணி ஏற்கனவே இந்த சீசனில் ப்ளே ஆஃப் செல்லும் வாய்ப்பை இழந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த கட்டுரையில்