செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. ஐபிஎல் 2020
Written By Sinoj
Last Updated : சனி, 26 செப்டம்பர் 2020 (23:39 IST)

ஐபிஎல்-2020 ; இலக்கை விரட்டிப் பிடித்து வெற்றி பெற்ற கொல்கத்தா அணி !

ஐபிஎல் -2020 திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில்  கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியுடன் ஐதராபாத் அணி மோதவுள்ளது.

ஏற்கனவே சென்னை கிங்ஸ் அணியைப் பதம் பார்த்த ஐதராபாத் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்து ஆடியது.

 
இதில், மணிஷ் பாண்டே - 50 விருத்திமான் சஹா - 24 36 பந்துகளில் 3 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸருடன் அரை சதம் அடித்தார். இந்நிலையில் கொல்கத்தா அணிக்கு 143 ரன்களை இலக்காக நிர்ணயித்தது டேவிட் வார்ன தலைமையிலான ஐதராபாத் அணி. இதனால் இருஅணியினருக்கு இடையே ஜெயிப்பது என்ற யார்சுவாரஸ்யம் கூடியது.

8 வது லீக் ஆட்டத்தில் இரண்டாவதாகக் களமிறங்கிய தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா அணி 18  ஓவர்களின் 3  விக்கெட் இழப்பிற்கு 145  ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணிய விழ்த்தி வெற்றி பெற்றது. கொல்கத்தா வீரர் சுபமன் கில் ஆட்டமிழக்காமல் 70 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு அடித்தளாமிட்டார்.