1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. ஐபிஎல் 2019
Written By
Last Updated : சனி, 20 ஏப்ரல் 2019 (08:09 IST)

அடிச்சு தூக்கிய கோலி: கொல்கத்தாவிற்கு பதிலடி கொடுத்த பெங்களூர் அணி

நேற்றைய ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணி 10 ரன் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியை வீழ்த்தியது.
விராத் கோஹ்லி தலைமையிலான பெங்களூரு அணி இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டியில் இதுவரை விளையாடிய எட்டு போட்டிகளில் 7 போட்டிகளில் தோல்வி அடைந்த நிலையில் நேற்று கொல்கத்தா அணியுடன் மோதியது. இதில் கொல்கத்தா அணி டாஸ் வென்று முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்தது.
 
அதன்படி முதலில் களமிறங்கிய பெங்களூர் கேப்டன் அபாரமாக பேட்டிங் செய்து 58 பந்துகளில் 100 ரன்கள் அடித்தார். அதேபோல் எம்.எம்.அலி 28 பந்துகளில் 66 ரன்கள் அடித்தார். கடைசி நேரத்தில் களமிறங்கிய ஸ்டோனிஸ் 8 பந்துகளில் 17 ரன்கள் அடித்து 4 விக்கெட் இழப்பிற்கு 213 ரன்கள் எடுத்தது பெங்களூர் அணி.
 
214 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்கள் எடுத்து 10 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூர் அணியிடம் தோல்வியை தழுவியது. கடந்த 5ந் தேதி பெங்களூர் அணி கொல்கத்தா அணியிடம் தோற்றதற்கு இந்த மேட்சில் வெற்றி பெற்றதன் மூலம் அவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளனர்.