வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. ஐபிஎல் 2019
Written By
Last Modified: ஞாயிறு, 21 ஏப்ரல் 2019 (17:56 IST)

ஐதராபாத்துக்கு 160 ரன்கள் இலக்கு: தொடர் தோல்வியை தவிர்க்குமா கொல்கத்தா?

ஐபிஎல் தொடரின் 38வது போட்டியான இன்று ஐதராபாத் மற்றும் கொல்கத்தா அணிகள் மோதி வருகின்றன. இன்றைய போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி முதலில் பந்துவீச முடிவு செய்ததால் கொல்கத்தா அணி களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் லின் பொறுப்புடன் விளையாடினாலும் அடுத்தடுத்து விக்கெட்டுக்கள் விழுந்தது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரஸல் கூட இன்று 15 ரன்களில் அவுட் ஆனதால் கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 159 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. 
 
லின் 51 ரன்களும், ரிங்குசிங் 30 ரன்களும், சுனில் நரேன் 25 ரன்களும், ரஸல் 15 ரன்களும், ரானா 11 ரன்களும் எடுத்தனர். ஐதராபாத் அணியின் கே.கே.அஹ்மது மூன்று விக்கெட்டுக்களையும் புவனேஷ்குமார் இரண்டு விக்கெட்டுக்களையும், சந்தீப் ஷர்மா மற்றும் ரஷித் கான் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
 
இந்த நிலையில் ஐதராபாத் அணி 160 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இன்னும் சில நிமிடங்களில் பேட்டிங் செய்யவுள்ளது. அந்த அணியில் வார்னர், பெயர்ஸ்டோ, வில்லியம்சன், விஜய்சங்கர், யூசுப்பதான், ஹூடா ஆகிய பேட்ஸ்மேன்கள் நல்ல பார்மில் இருப்பதால் இந்த எளிய இலக்கை எட்டுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்