Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

வார்னர் இடத்தை நிரப்புவது கடினம்- கேன் வில்லியம்சன்

warner
Last Updated: திங்கள், 7 மே 2018 (17:12 IST)
ஹைதராபாத் அணியில் வார்னர் இடத்தை நிரப்புவது கடினம் என்று கேப்டன் கேன் வில்லியம்சன் கூறியுள்ளார்
 
இந்திய கிரிக்கெட் திருவிழா என்று அழைக்கப்படும் ஐபிஎல் தொடரின் 16-வது சீசன் கடந்த மாதம் தொடங்கியது. இந்த தொடரில் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் தண்டிக்கப்பட்ட ஹைதராபாத் அணியின் முன்னாள் கேப்டன் வார்னருக்கு பிசிசிஐ விளையாட தடை விதித்தது.
 
இதனால் ஹைதராபாத் அணிக்கு புதிய கேப்டனாக கேன் வில்லியம்சன் நியமிக்கப்பட்டார். அவரது சிறப்பான கேப்டன்சியில் ஹைதராபாத் அணி 9 போட்டிகளில் விளையாடி 7 போட்டிகளில் வென்று புள்ளிப்பட்டியலில் தற்போது முதலிடத்தில் உள்ளது.
warner
 
இந்த நிலையில் செய்தியாளர்கள் வார்னரின் கேப்டன்சி குறித்து கேன் வில்லியம்சனிடம் கேட்டபோது, அவர் டேவிட் வார்னர் இடத்தை நிரப்புவது கடினம். அவருக்கு மாற்று என்பது இயலாத காரியம். அவர் உலகின் சிறந்த டி20 பேட்ஸ்மேன்களில் ஒருவர். கடந்த சில வருடங்களாக சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக சிறப்பாக விளையாடினார் என கூறியுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :