திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 7 மே 2018 (05:28 IST)

ராகுல் அதிரடியால் பஞ்சாபுக்கு மேலும் ஒரு வெற்றி: ராஜஸ்தானை வீழ்த்தியது.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடரின் 38வது போட்டியில் ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் அணிகள் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் முதலில் பந்துவீச முடிவு செய்தது. இதனையடுத்து முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஒவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 152 ரன்கள் எடுத்தது.
 
இதனால் 20 ஓவர்களில் 153 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய பஞ்சாப் அணி 18.4 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 155 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ராகுல் அதிரடியாக விளையாடி 54 பந்துகளில் 84 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
 
இருப்பினும் மூன்று முக்கிய விக்கெட்டுக்களை வீழ்த்திய முஜீப் ரஹ்மான் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியால் பஞ்சாப் அணி அதே நான்காவது இடத்தை தக்க வைத்து கொண்டாலும் 12 புள்ளிகள் எடுத்துள்ளது. ராஜஸ்தான் அணி தோல்வி அடைந்ததால் 6 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் உள்ளது.