1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. ஹாலிவுட்
Written By
Last Modified: வெள்ளி, 11 ஏப்ரல் 2014 (18:22 IST)

இந்திய பெண்ணின் அமெரிக்க காதல்

நவீன உலகில் அடுத்த வீட்டில் இருப்பவர்களுடன்தான் அறிமுகம் வைத்துக் கொள்வதில்லை. தொழில்நுட்ப சாதனங்களின் உதவியால் அண்டார்டிகாவில் இருப்பவர்களுடன் சாட் செய்ய முடிகிறது.
 
இந்திய பெண் ஆஷாவும், அமெரிக்க இளைஞன் ஹேங்க்-ம் வீடியோ கடிதங்கள் மூலம் நெருக்கமாகிறார்கள். இந்த புதிய உறவு அவர்களிடையே ஏற்படுத்தும் மாற்றங்களைப் பற்றிய படம் Hank and Asha.
கதையில் வரும் ஆஷா Prague -ல் படித்து வரும் மாணவி. இந்த கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர் மஹிரா ஹக்கர். இதற்கு முன் பல ஆங்கிலப் படங்களில் நடித்துள்ளார். கொல்கத்தா பூர்வீகம். பல சர்வதேச விருதுகள் வாங்கியிருக்கும் இப்படம் இன்று அமெரிக்காவில் வெளியாகிறது. அமெரிக்கா என்றால் ஒட்டு மொத்த வட அமெரிக்காவில் அல்ல. நியூயார்க் சிட்டியில் மட்டும். வரும் 18ஆம் தேதி லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் கலிஃபோர்னியா. அதையடுத்து இன்னொரு நாளில் இன்னொரு மாகாணம்.
 
இந்தியாவில் படம் எப்போது வரும் என்று தெரியவில்லை. வரும் போது கண்டிப்பாக பார்த்துவிடவும்.